Wednesday 21 December 2011

எந்நேரமும் காதல் காலை மாலை ராத்திரி (ராத்திரி) -காதலால் ஒளிர்ந்த இரவு

காதலால் ஒளிர்ந்த இரவு

இரவின் மடியில் துயிலும் பொழுதில்
இருகண்மூடி என்னருகே உறங்கிகொண்டே
கனவிலும் வந்து காட்சிகொடுத்து
உறக்கம் கெடுக்கும் தேவதையை
நினைத்தபடியே புரண்டு படுக்கும்
தருணங்களில் திறந்திடும் கண்களில்
தற்செயலாய்த் தெரியும் தேவதையின் முகம்.

தூக்கம் பறந்தோட ரசிகன் உயிர்பெற்று
கண நேரத்தில் பரிணாம வளர்ச்சியுமுற்று
கவிஞனாகிக் கட்டிலில் சம்மனமிட்டு
மடியில் வைத்த தலையனையை விடவும்
மிருதுவான தேவதையின் முகத்தை
ஒப்பிட முயன்று ஒப்பேதும் இல்லாத
உண்மை உணர்ந்து ஞானியாகிறான்.

நைட் லேம்ப்பின் மங்கிய ஒளியிலும்
பளிச்சென தெரிகிறாள் என் தேவதை
ஒருவிரல் கொண்டு கண்ணம் தொடுகையில்
சற்றே நெளியும் அவளிரு புருவங்களும்
அந்தக் கணநேர கண் இமைச் சுருக்கங்களும்
எந்தக் கவிஞனுக்கும் சாமி கொடுத்த வரம்.
எனக்கோ என் தேவதையால் வாய்க்கிறது தினம்.

தூங்கும் போதும் அழகாய்த் தெரிய
தேவதைகளால் மட்டுமே முடியும் என்பது
என் தேவதை தூங்கும் அழகைக்
கண்ணால் கண்ட பின்னரே எனக்குப் புரிந்தது

தூக்கத்திலும் புன்னைக்கக் கற்றுக்
கொடுத்தது யார் என் தேவதைக்கு.
வான்நிலவே பூமிவந்தாலும் ரசிகர்
மன்றம் வைக்கும் அவள் புன்னகைக்கு

உடல்சார் உணர்வுகளால் இயங்கி முடித்து
கலவியிற் களைத்த மனைவியை ரசிக்க
உடல்கொண்ட எவனாலும் முடியுமிங்கே

உள்ளத்தாற் கூடி ஓரலையில் ஓடி
சொர்க்கமது தேடி பேரின்பம் நாடிக்
களைக்கச் செய்யவும், களைத்தவளை
ரசிக்கவும் கவிஞன் வேண்டுமங்கே.


உடலெனும் மாயை மறைந்து
மனமெலாம் காதலெனும்
ஞானம் மட்டும் நிறைந்து
உள்ளத்துச் திசுக்களில்
காதலெனும் உணர்வூறி
உணர்வுகள் இடம் மாறி
மன மொழி மெய் கடந்த
பேரின்பப் பெருவெளியில்
தோன்றும் தேவதையின் முகம்.

ஏஸி மெஷினின் சப்தம் தவிர்த்து
எங்கும் நிறைந்த இரவின் நிசப்தம்
சாட்சி சொல்லும் காமம் கடந்த
நைஷ்டிக சந்நியாசக் காதலுக்கு.

கதவிடுக்கின் வழியே கசிந்த காதல்
மெல்ல மெல்லக் காற்றில் கலந்து
ஆக்சிஜனுக்கும் உயிரூட்டி
பூமிப்பந்தைக் காதலில் நனைக்கும்.

சற்று நேரத்தில் லௌகீகக்
கடமைகள் தொடங்குவதற்காய்
புலரக் காத்திருக்கும்
காதலில் நனைந்த உலகம்.

நிசப்த தேரேறி உலகை வலம்வரும்
காதலால் ஒளிர்ந்த இரவு.

2 comments:

  1. >>மதுரையில் பிறந்து பிழைப்புக்காய் உலகம் சுற்றும் நல்லபையன்.

    ஹி ஹி ஹி நல்ல பையன்னா? இன்னா அர்த்தம் பாஸ்?

    ReplyDelete
  2. ஹி ஹி ஹி நல்ல பையன்னா? இன்னா அர்த்தம் பாஸ்?

    அண்ணே " நல்ல பையன் அப்டினா இந்த அக்கப்போரு , அக்கப்போரு அப்டினா நல்லபையன்".

    ReplyDelete