Wednesday, 2 May 2012

புளியங்கொட்டையின் தேவடியாத்தனமும் திணறும் உடன்பிறப்புகளும்.

இணையத்தில் உலவும் அல்லக்கை உடன்பிறப்புக் குஞ்சாமனிகளின் செய்கைகள் சந்தேகத்தைக் கிளப்புகின்றன. இந்த மேற்படி அ.உ.கு.கள் திமுகவுக்கு வேண்டியவர்களா ? அல்லது வேண்டாதவர்களா? என்று.

ஆம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போயஸ்கார்டன் போந்தாக்கோழி வெற்றி பெறக் காரணம் தமிழகம் முழுதும் இந்த அ.உ.கு.மணிகள் ஆடிய ஆட்டம் தானே ஒழிய இந்த கொடநாட்டுக் கோமகளும், மன்னார்குடி மாபியாவும் வந்து நால்லாட்சி தருவார்கள் என்ற நம்பிக்கை அல்ல.

மதுரையில் முனியாண்டி விலாஸ் உணவகங்கள் மிகவும் பிரபலம். ஆனால் ஒரே சிக்கல் இன்னார் தான் அந்தப் பெயரை பயன் படுத்த வேண்டும் என்று யாரு காப்புரிமை வாங்கவில்லை. அதனால் யார் வேண்டுமானாலும் அந்தப் பெயரைப் (பயன்)படுத்தலாம்.

தற்போது நடுநாக்கில் அரிப்பெடுத்த ஒரு முற்றிய புளியங்ககொட்டை அப்படி நினைத்துவிட்டது போலும் எம் ஈழத்துச் சொந்தங்களை. போர் துவங்கிய உடனேயே சோனியாவின் அடியை வருடி, தண்டனிட்டு விட்டு, எதையோ தின்று விட்டு வந்து  வாய் கூசாமல் " பிரபாகரனே செத்துப் போனாலும் தனி ஈழம் அமையாது " என்று வாந்தியெடுத்த அதே புளியங்கொட்டை இப்போது சோறு தின்றது போல் காட்டிக்கொள்ள டெசோ வைக் கையில் எடுத்திருக்கிறது.

காலைச் சிற்றுண்டிக்கும், மதிய உணவிற்கும் நடுவில், தலைமாட்டில் துணைவியையும் கால் மாட்டில் இரண்டாவது மனைவியையும் வைத்து நடித்த நாடகத்தைச்  சிலையாய் நிற்கும் சிவாஜி கணேசனே காணச் சகிக்காமல் என் சிலையை ஏன் இங்கு வைத்தீர்கள் என்று கொந்தளித்திருப்பார். அப்போது கூட இந்தப் புளியங்கொட்டை தரப்பில் சில கோயபல்ஸ்கள் வெற்றி வெற்றி என்று போஸ்டர் அடித்து ஒட்டியதை சிங்களத்துக் கருணாநிதியான ராஜபக்சேவே எதிர்பார்த்திருக்க மாட்டார்.


அஞ்சாக்குஞ்சனும், கேடி மாறன்களும் மோத முன்று தமிழர்கள் கருகிச் செத்தனர்.
அதே அஞ்சாக் குஞ்சனும், "பாத்திமா பாபு " புகழ் தலவிதியும் மோத தா.கிருட்டிணன் என்ற தமிழர் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த இரு சம்பவங்களுக்கும் என்ன செய்தது அந்தப் புளியங்ககொட்டை. ஒரு கண்டனம்,வருத்தமாவது தெரிவித்ததா?


கட்டிய மனைவியை கன்னி கழியாமல் எட்டு வருடமாய் வைத்திருப்பவன், வப்பாட்டிக்கு வளைகாப்பு வைக்கத் துடிக்கிறான். 


 இப்போது கூட அந்தப் புளியங்கொட்டைகள் மேலே இருக்கும் வரிகளின் உண்மையை உணராமல் ஈழத்தவர் எல்லாம் வப்பாட்டிகளா? பாரீர் இந்த அநியாயத்தை என்று கிளம்பும். அவைகளைச் சொல்லிக் குற்றமில்லை. குமுதத்தை ஆட்டையப் போட வரதன் என்றால், காஞ்சித் தலைவனின் திமுக வை ஆட்டயப் போட கருணா. அவன் வழி நிற்பவர்களிடம் சூடு, சொரணை ஏன் மனசாட்சியைக் கூட எதிர்பார்க்க முடியாது. ஆனால் யாம் விழைவது  இதுவே.
முதலில் தன் வாரிசுகளால் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் குரல் கொடுக்கட்டும்.
பின்னர் தன் பதவி வெறியால் ஒன்பது ஓட்டைகளையும் பணத்தால் அடைத்துவிட்டு, வேடிக்கை பார்த்த, விளக்குப் பிடித்த, ஒன்றுமே நடக்கவில்லை என்று நாடகமாடியதால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிப் பேசலாம்.
கூரையில் இருக்கும் கோழி அதன் குண்டியைத் திருப்பிக் காட்டிக் கொக்கரிக்கிரதாம் இவனிடத்தில். இவனும் வானம் ஏறுவானாம். வைகுண்டம் காட்டுவானாம். விபச்சாரத்திலும் கேவலமாய் பிரச்சாரம் செய்கின்றன புளியங்கொட்டையில் விளைந்த பூஞ்சைகள்.
இழி நிலையில் இருக்கின்றனவாம் எம் சொந்தங்கள். ஆமாம் அடா விலைமக்களே! இழி நிலை தான். இந்தக் புளியங்கொட்டை கருணாவும், அவனது அல்லக்கை குஞ்சாமனிகளும் எம் சொந்ததங்களைப் பற்றிப் பேசும், அறிக்கை விடும் இழிநிலையில் தான் இருக்கிறார்கள்.
இதைவிட கேவலமான இழிநிலை எது தெரியுமா? இந்த விலைமகனும் அவன் கூட்டமும் வந்து என் சொந்தங்களுக்கு நல்வாழ்வு தருகிறோம் என்று வாந்தியெடுப்பது.
எம் மக்கள் ஒன்றும் அப்படி ஓர் இழிநிலையில் இல்லையடா மானங்கெட்ட புளியங்கொட்டைகளா !!!!! புளுகு மூட்டைகளா!!!!
இழி நிலை என்றால் எது தெரியுமா
1)தோல்விக்குக் காரணம் யாரென்று தெரியும். அதைச் சொல்லி பிரச்சனையைக் கிளப்ப விரும்பவில்லை என்று பொதுக்குழுவிலே சொல்வது.
அதாவது வாரிச் சுருட்டிய வாரிசுகளும், அவர் தமது அல்லக்கைகளும் தான் காரணம் என்று தெரிந்தும் அதைச் சொல்லா இயலா கையாலாகாத நிலையில் இருப்பது.
2)அடுத்த தலைமைப் பதவி யாருக்கு என்று சொன்னால் தன் உயிருக்கே ஆபத்து வருமோ என்று பயந்து இழுத்தடிப்பது.
3)சக்களத்தி மக்கள் சண்டை சட்டசபை வந்து சந்தி சிரித்தது.
4)தொலைபேசியில் தரகு பேசி கையும், களவுமாய் மாட்டிய பிறகு பத்திரிக்கையாளர் கேள்விக்கு இரண்டு பெண்கள் பேசிக்கொண்டார்கள் என்று பதிலளித்தது.
ஏன் பிறந்த போதோ அல்லது இந்த நாற்பத்தி மூன்று வயது வரையோ தெரியாதா கனிமொழி பெண் என்று. சரி இப்போது தெரிந்தது என்றால் எப்படித் தெரிந்து கொண்டதாம் இந்த "விலை மகளிடம் கடன் சொல்லி வந்த " புளியங்கொட்டை. ஏதும் சிடி இருக்கிறதா?


அகத்திகுலையை மேய்ந்த செம்மறி ஆடு புழுக்கை போட்டது போல் இந்தப் புளியங்கொட்டை அறிக்கை விடுமாம். அதற்கு அல்லக்கைகள் உடனே எல்லாரும் போய் புளியங்கொட்டையின் பின்னால் நில்லுங்கள் என்று கூவிவருமாம். அப்புறம் ஏன் இவர், அவர் எல்லாம்
புளியங்கொட்டையின் பின்னால் நிற்கவில்லை, நின்று தானே இருக்கவேண்டும் என்று வெக்கங்கெட்ட வியாக்கியானக் கேள்வி வேறு? மானமும், கூச்சமும் இல்லாவிட்டால் தான் உறுப்பினர் அடையாள அட்டையே கிடைக்கும் போல.

அதாவது தேர் தெருவில் நிற்கிறது. இழுத்து நிலை சேர்க்க வேண்டும் என்று எல்லோரும் முயன்ற போது, இந்தத் தேரு நிலை சேராது என்று அறிக்கை, பின்னர் துணைவி மகள் தலைமையில் ஒரு கூட்டம் போயி டீ குடித்துவிட்டு வந்து தேர் நிலையில் தான் இருக்கிறது என்று உறுதிமொழி வேறு.
இப்போது ? தேவடியாள் சிங்காரித்து வந்துவிட்டாள். எனவே இதுகாறும் முயன்றவர்கள் அவள் பின்னால் நில்லுங்கள்,
தேவடியாள் பின்னால் நின்றால் தேர் தானே நிலை சேரும் என்று விளம்பரம் செய்கிறார்கள்.  

பொதுவாக கையும் களவுமாய் மாட்டி, மக்கள் செருப்பைச் சாணியில் முக்கி மூஞ்சியில் அடிப்பது ஒன்றும் புளியங்கோட்டைக்குப் புதிதல்ல. பலமுறை வாங்கியது தான். அனால் இந்த முறைத் தப்பிக்க தேர்ந்தெடுத்த முறை ?
வழக்கமாக கையாளும், பார்ப்பன ஆதிக்கம், ஆரிய மாயை, வந்தேறிகளின் சூழ்ச்சி, வடவர்கள் வஞ்சகம், நான் சூத்திரன் போன்ற ரெக்காடுகள்  தேய்ந்து விட்டதா? அல்லது அவைகளைப் பயன்படுத்தினால் தாயாளுவும், ராசாத்தியும் விவாகரத்து கோரிவிடுவார்களா? பின் என்ன மயிருக்கு ஈழப் பாசம் என்னும் இந்த நாடகம் ?


சரி அந்தப் புளியங்கொட்டை, நடு நாக்கில் அரிப்பெடுத்து, ஆடு புழுக்கை போட்டது போல் பேசுமாம், யாரும் அதை விமர்சிக்கக் கூடாதாம்.  விமர்சித்தால் என்ன டீசர்ட் போடுற,  ஃபேஸ்புக்கில் என்ன போட்டோ வச்சுருக்க என்று கேள்வி வருமாம்.


அது சரி. சேகுவேரா டீசர்ட் போட இன்னாருக்குத் தான் தகுதி இருக்கிறது என்றால் 

1)  கடவுள் இல்லை என்று சொன்ன எங்கள் ஈ.வே .ரா.வின் பெயரைப் பயன்படுத்த என்ன அருகதை இருக்கிறது இந்தப் புளியங்கொட்டைக்கு?
2) சாதியை மறுத்த பெரியாரின் பெயரைச் சொல்லவாவது அருகதை இருக்கிறதா இந்தப் புளியங்கொட்டைக்கு ?


3) ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று சொன்ன காஞ்சித் தலைவனின் பெயரைச்சொல்ல அருகதை இருக்கிறதா, மூன்று உயிர்களைக் கொளுத்திக் கருக்கிய மகனைக் கண்டிக்காத இந்த விலை மகனுக்கு?
4) வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும் என்ற உயர்ந்த நோக்கோடு வந்த அண்ணாத்துரையின் திமுகவில் இருக்க அருகதை உண்டா இந்த இனத் துரோகிக்கு?


தன் தேவைக்காக தனது உடலையும், உணர்வையும் விற்கும் பாலியல் தொழிலாளிக்கு தேவடியாள் என்று பெயர். அவ்வாறெனில் தன் சுயநலத்திற்காய் தன் இன உணர்வை, இன மானத்தை விலை கூவுகிற இந்தக் கருணாவுக்கு என்ன பெயர்? வைக்கோ சொல்வது சின்னப்புள்ளத்தணமாம். சரி.
அவ்வாறெனில், இந்தக் கருணாவின், நாடகமும், உடன்பிறப்புக்களின் குஞ்சாமணி பிரச்சாரமும் ? ஆம். அதே தான். தேவடியாத்தனம்.

இதுகாறும் யாம் தேவடியாள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியது இல்லை. ஏன் எனில் அதற்குச் சரியான ஆண்பால் சொல் இல்லாததால். இனி அஃதில்லை. ஆம் சரியான ஆண்பாற் சொல் - கருணாநிதி.

புளியங்கொட்டைக்குத் தெரியும் எங்கே வாய் வைத்தாலும் எந்தப் பன்னீரில் வாய் கொப்புளிக்க வேண்டும் என்று. அனால் பாவம் இந்தக் குஞ்சாமணிகள் தான் அந்தப் புளியங்கொட்டையின் புழுக்கைக்கும் மணக்கும் என்று சொல்லி சொம்பு தூக்கிவிட்டு, உட்காரக்கூட முடியாமல் குண்டி முழுக்கத் தழும்பு வாங்குகின்றன

Thursday, 29 December 2011

என்னவளே! உனக்காய் என் அறிமுகம்.

யாரோ எவனோ எப்பேற்பட்டவனோ
எனக் காத்திருந்து தரகர் கொடுத்த
நிழற்படத்தில் என்முகம் கண்டதும்
களவானியாய்த் திரிந்தவனோ
காவாளியாய் அலைந்தவனோ
என்றெல்லாம் எக்ஸ்ட்ராவாய்ப்
பயப்படும் என்னவளே!
இதோ உனக்காய் என் அறிமுகம்.

பிறப்பு

கோயில் மாநகரில் நாயக்கமன்னர் காலம்தொட்டு
கௌரவமாய் வாழ்ந்துவரும் குடும்பத்தின்
பெயரைக்கெடுக்கப் பிறந்த புல்லுருவி நான்.

கொள்ளைபசியுடன் பிறந்த ஞானப்பிரகாசம் நான்
பிறந்த மறுநாளே எம்பாட்டனாரைக்
கொன்று தின்று விட்டதாக் ஊருக்குள் பேச்சு.
இப்போதும் அடங்குவதில்லை நான்

வளர்ப்பு

அத்தனை பிள்ளைகளும் அமைதியாய் இருந்தாலும்
அடங்காமல் திரிந்த என்மேல்தான் பாசமதிகம்.

பலகாரம் சுட்டாலும், சீம்பால் கறந்தாலும்
தனிப்பங்கு எனக்கு. சாமி பங்கும் எனக்குத்தான்.

அடங்கி நடப்பது ஆன்மைக்கு இழுக்கு,
சொல்பேச்சுக் கேட்பது கௌரவக் குறைச்சல்
அண்ணன் தம்பி ஆனாலும் பங்கு பாகம் வேறு
போன்ற அரும் கொள்கைகளுடன் கௌரவமாய் வளர்ந்த 
அப்பாவிக் குழந்தை நான். 
அந்தக் குணம் இன்னமும் அப்படியே.

படிப்பு

எட்டாம் வகுப்பிலே கட்டடித்து
ஒன்பதாம் வகுப்பில் உண்டியல் உடைத்து
பத்தாம் வகுப்பில் ஹால் டிக்கட் வாங்கியதும்
வாத்தியாரையே ஆள் வைத்து அடித்து எனப்
படிப்படியாய் படிப்பில் முன்னேறியவன் நான்.


"ஊருக்குள்ள மதிக்கமாட்டாய்ங்க" 
என்ற ஒரே காரணத்திற்காய் +2;
அப்பாவின் கௌரவத்திற்காக
அலுப்புடன் ஒரு B.E.
அம்மாவின் ஆசைக்காக
போனால் போகட்டும் என்று
பெருந்தன்மையுடன் ஒரு MBA
படித்த ஒழுக்கமான மாணவன் நான்.

பொறியியல் படிக்கச் சொன்ன போதே
"அந்தக் காச்சக் கைல குடுங்க
நா வட்டிக்குவிட்டுப் பொழச்சுகிருவேன்"
என்று சொன்ன என் நேர்மையை
யாரும் பாராட்டாதது
காலத்தின் கோலம்.

நட்பு

பங்காளி துணிஞ்சு செய்டா கேஸப் பாப்போம்
ஏறிச் செய் மாப்ள எவனையும் பாப்போம்
சங்கம் என்னடா பங்காளி நம்மள ஒதுக்கி வைக்கிறது?
இந்த மானங்கெட்ட சங்கத்த நம்ம ஒதுக்கி வப்போம்
கூப்டு வாராதுக்குப் பழக்கம் எதுக்கு மாப்ள
என்றெல்லாம் சொல்ல மட்டும் அல்ல செய்தும் வந்திருக்கிற நட்பு எமது.
மண்ணிப்பும், நன்றியும் பழக்கமில்லை எங்களுக்குள்
எவன் வீட்டு விசேசத்திற்கும் எவனும்
அழைப்பு வைத்ததுமில்லை. போகாமல் இருந்ததுமில்லை.


எதிர்பார்ப்பு

எத்தனை சாதித்தாலும் வீட்டில்
படர்க்கையில் சுட்டும் போது "அது" என்றே
சுட்டுகிறார்கள் இன்னமும்.
"அவர்" என்பதெல்லாம் அதீதம்.
"அவன்" என்றாக்கினால் போதும்.
அஃறிணையாய் அறியப்பட்ட என்னை
உயர்திணையாய்க் காட்ட வேண்டும்


உறுதிமொழி

மறுபடியோர் ரிசஸன் வந்தாலும்
சாஃப்ட்வேர் லைனே கவிழ்ந்தாலும்
உனக்கு உண்ண உணவும், உடுக்க உடையும்
உறங்கத்தரையும் உத்தரவாதம்
தாத்தா புண்ணியத்தில்.


முடிவாய்.......

நுனிநாக்கு ஆங்கிலமும், ஹைஃபை நாகரீகமும்
பழக்கமில்லை எனக்கு. வெறுப்புமில்லை.
பழக்கித் தந்தால் பழகிக் கொள்வேன்.

இத்தனைநாளென் மொத்தவாழ்க்கையும் இதோ
இந்த வரிகளுக்குள் கொஞ்சமும் மறைவின்றி

ஏற்பதும் மறுப்பதும் உன் முடிவு.

ஏற்றுவிட்டால்...

வசந்தம் உன் வாழ்க்கை எண்ணிக்கொள்.

பாரினில் செட்டிலாவதாகப் பெருமையுடன்
உன்னிடம் சொல்லும் உன் நண்பிகளிடத்தில் 
கம்பீரமாய்ச் சொல் 
"நான் சொர்க்கத்தில் செட்டில்டு" என்று


ஏற்காவிட்டால்....

உனக்கு .... நீ குடுத்து வச்சது அவ்ளோதான்.

எனக்கு? .... உலகம் பெருசு....
கோடு(code) எழுதிக் களைத்துப் போன ஸாப்ட்வேர் மக்கள் பப்(pub) பக்கம் ஒதுங்க நினைக்கும் மாலை நேரம். தலைதுவட்டியவண்ணம் கடிகாரம் பார்த்தேன். மணி சரியாக ஐந்தேகால். உடை மாற்றிக் கிளம்பினால் சரியாக இருக்கும். நேற்றே அனைவரிடமும் சொல்லிவிட்டேன் இன்று எனது பிறந்தநாள் விருந்து என்று. மேன்சனில் இருந்தும் மது அருந்தாத என் போன்ற தர்திகளுக்காக இந்த விருந்து. குடிமக்கள், பெருங்குடி மக்கள் எல்லாம் தனியாக அழைத்துப் போகவேண்டும் இந்த ஞாயிற்றுக் கிழமை. ஞாயிற்றுக்கிழமை நினைத்தாலே பயமாக இருந்தது. 

நான், கௌதமன், சௌந்தர், அரவிந், சபரி, ரகு மற்றும் பலர் கிளம்புவதாய்த் திட்டம். பாபு சாரை அழைக்கலாம். என்ன மனிதர் "வெள்ளைப்பல்லி" (தமன்னா) படம் போட்ட டி-ஷர்ட்டும், நாலு முழ வேட்டியுமாய் வந்து நிற்பார்.அது அவரிஷ்டம். ஆனாலும், "இராஜா இனிமே ட்ரீட், அது இதுனு ஸாரக் கூப்புடாதீங்கப்பா, அவரு பாட்டுக்கு கண்டதையும் சாப்டுட்டு வந்துட்டு ரெண்டு நாள், மூனு நாள் ஸ்டொமெக் அப்ஸட் ஆகி என்னப் படுத்தி எடுக்கிறார்" என்ற அண்ணியின் கோரிக்கையை ஏற்று பாபு ஸாரைக் கூப்பிடவில்லை. கனேஷை அழைக்கலாம். ஆனால் எல்லோரும் பேச்சுலர்கள். அவர் மட்டும்... இன்னொரு நாள் அவரை அழைத்துச் செல்லலாம்.

ஒருவழியாகக் கிளம்பினோம் மேன்சனைவிட்டு. வெளியே வந்ததும் இரண்டு சூப்பர் ஃபிகருகள் தமிழ்முரசு பேப்பர் போல் ( சும்மா நச்சுனு இருக்கு) எதிர்ப்பட்டன. என்னடா இது நம்ம ஏரியால இப்டி அல்ட்ரா மாடர்ன் ஃபிகருகளா என்று ஆச்சர்யப்படனர் என்னைத்தவிர மற்ற அனைவரும். பொதுவாக நான் ஸைட் அடிப்பதில்லை என்பதால் அங்கே அப்படி இரண்டு பெண்கள் வந்ததே தெரியாமல் என் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தேன். பார்த்தவர்கள் சொன்னார்கள் " ராஜா ஸ்லீவ்லெஸ் டாப்ஸும், லோஹிப் ஜீன்ஸுமா ரெண்டு ஃபிகருங்க ராஜா. நல்ல சகுனம்" என்று. ம்ஹூம். எங்கள் ஈ.வெ.ரா. பெரியாரே மறுபடி வந்தாலும், மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தை நல்ல நேரம் பார்த்து தொடங்க வைத்துவிடுவார்கள் இவர்கள். தமிழர்கள். நொந்தபடியே நடந்தேன்.

லாம்சியில் மசால் டீ குடித்துவிட்டு நடையைக் கட்டினோம். சிவன் கோவில் முக்குத் திரும்பும் முன் சந்தி சிரித்தது. இல்லையில்லை சந்தியில் நின்று நாங்கள் சிரித்தோம். சிரிக்க வைத்தது சவுந்தரின் காமெடி. இந்த மனிதரின் உடலில் ஒவ்வொரு துளி இரத்ததிலும் காமெடி தான் இருக்கும் போல. இவருடன் அமர்ந்து சேரன், தங்கர் பச்சான் படங்கள் பார்த்தால் கூட நாம் குலுங்கிச் சிரிப்பது உறுதி. அதிலும் ஒன்பது ரூபாய் நோட்டு என்கிற படத்தைப் பார்த்தபோது இவரின் காமடியில் அந்தத் திரையரங்கமே சிரித்தது. இடைவேளையின் போது ஸ்நாக்ஸ் கவுண்டரில் தியேட்டர் ஊழியர்கள் "ஸார் இது சீரியஸ் படம் சார். ஆனாக்க இம்மாங் காமடியா ஓடுனது இந்த ஷோ தான் சார்" என்றூ சொல்லி சவுந்தருடன் கைகுலுக்கினார்கள். அப்பேற்பட்டவர் சவுந்தர்.

அரவிந்த். வாட்டசாட்டம் என்ற வார்த்தைக்கு டிக்ஷ்னரியில் இருக்க வேண்டிய பெயர்.காசிவிநாயகாவோ ஆந்திரா மெஸ்ஸோ எனக்குச் சரியாக் கம்பெனி குடுப்பவர். இவர் அநியாயத்துக்கு நல்லவர். வாயில் வைக்கப் போவதைப் பிடுங்கித் தன்றால் கூட கொடுத்துவிட்டுச் சிரிப்பார். உங்களுக்கு இல்லாததா ராஜா என்பார். நைட் இரண்டு மணிக்கு அடித்து எழுப்பி என்ன அரவிந்து தூக்கமா என்றால் கூட கோபப்படமாட்டார். ஆமாங்க இராஜா, நீங்க தூங்கலையா என்று பரிதாபமாகக் கேட்பார். ஆனால் என்ன மனிதருக்கு தாமதமானால் பொறுக்காது. ஐந்து நிமிடம் லேட்டாய் வந்தால் கூட நாம் தொலைந்தோம். கத்திக் குவித்து களேபரம் செய்து விடுவார். எனவே இன்று அவரையும் கூட்டிக்கொண்டே கிளம்பிவிட்டாச்சு.

சபரி. நல்ல கலர். நல்ல உத்யோகம். நல்ல சம்பளம். ஆனால் நாய்ப் பிழைப்பு. ஆம். நான் மிருகங்களில் சிங்கமாகவும், பட்சிகளில் கருடனாகவும் இருக்கிறேன் என்றெல்லாம், கீதையில் சொன்ன கண்ணன், ஜொள்ளர்களில் சபரியாக இருக்கிறேன் என்று சொல்லாமல் விட்டது அந்தக் கண்ணனின் குற்றமேயன்றி எங்கள் சபரியின் குற்றமல்ல. சபரி அப்பேற்பட்ட ஜொள்ளன். அவன் செல்பொனின் அட்ரஸ் புக்கில் இருக்கும் நம்பர்களில் அவன் தகப்பனாரின் நம்பர் ஒன்று தவிர மற்ற எல்லாம் பெண்கலுடையதே. கேட்டால் "ப்ரென்ட்ஷிப், பிரதர்ஹுட்" என்று லெக்ஸர் அடிப்பான்.


கௌதமன் - இவர் வழக்கம் போல் அன்றும் அலுவலகத்திலேயே உழைத்துக் கொட்ட, மற்றவர்களை டிராபிக்கும் இன்ன பிறவும் நாக் அவுட் செய்ய நாங்கள் கிளம்பிவிட்டோம். மவுண்ட்ரோடு சாந்தி தியேட்டர் எதிரே உள்ள ஒரு ஹோட்டலில் தான் விருந்து. சாந்திதியேடர் சிக்னலை விடுத்து, புஹாரி ஹோட்டல் எதிரே சென்று சாலையைக் கடக்க முயன்றோம். எப்பப்பா. ஸ்பெக்ட்ரம் வழக்கு தீர்ப்பு வருவதற்குள் சாலையக் கடந்து விடவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். எப்பா சாமி. பொறியியல் பட்டதாரிகளும், மேலான்மை முதுகலைப்பட்டதாரிகளும் சேர்ந்து சாலையை கடப்பது என்பது, மனைவியை அழைத்துக் கொண்டு T.நகர் சென்றுவருவதை விடக் கஷ்டம் என்று புரிந்தது.


ஒருவழியாக சாலையைக் கடந்து, ஹோட்டல் காம்ப்ளக்சை அடைந்தோம். லிப்டிற்குக் காத்திருக்கையில், எதிர்ப்பட்டனர் சாரி சாரியாய். ஆம் சபரிக்கு மிகவும் பிடித நார்த் இந்தியன் ஆன்டிகள். அவன் டேஸ்டே அப்படித்தான். திருமணமான 35 வயதுகுட்பட்ட ஆன்டிகளென்றால் சபரி லாஸ் ஆப் பேயில் லீவு போட்டு ஸைட் அடிப்பான். இன்று அவன் காட்டில் மழை. ஆனால் மனதை உறுத்தியது ஒரு விஷயம். அவர்கள் கைகளில், காதுகளில், கழுத்துகளில், கால்களில் அட சேலைகளில் கூட பளபளா.
"எல்லாம் வட்டிக்கடையில சம்பாதிச்ச காசு ராஜா. உழச்சு சம்பாதிச்சா இப்டிலாம் மினுக்கிட்டுதிரிய மனசு வருமா?" சவுந்தர் ஃபீலிங்ஸாய்க் கேட்டார். எங்களுக்குத் தெரிந்து சவுந்தர் வாழ்க்கையில் பேசிய ஒன் அன் ஒன்லி சீரியஸ் டயலாக் இது தான். சண்டாளப் பாவி ரகு, இதற்கும் சிரித்தான். புல்டாகு.(bulldog) எதற்குச் சிரிப்பதென்று வேண்டாமா? கோபமாய், ஆதாரவு கேட்கும் பாணீயில் அரவிந்தைப் பார்க்க அவரும் சிரித்துக் கொண்டிருந்தார். வேறு வழியின்றி நானும் சிரித்துத் தொலைத்தேன். சபரி? அந்த உறையூர் ஊர்க்காளி மாடு, இது எதையும் கவணிக்காமல், தங்கு தடையின்றி மேய்ந்துகொண்டிருந்தது ராஜஸ்தானி மக்காச் சோளக்கதிர்களை.

உள்ளே சென்று இடம் பிடித்து அமர்ந்தோம். எங்களுக்கு எதிர்வரிசையில் ஒரு நார்த் இந்தியக் குடும்பம். சுமார் 20 பேர் இருப்பார்கள். மேலே இருக்கும் பத்தியில் சவுந்தர் சொன்னதை உறுதிபடுத்திக் கொண்டிருந்தது. நாங்களோ ஆர்டர் செய்தோம். அளப்பரை செய்தோம். ரவுண்டு கட்டிணோம். ரவுசு காட்டினோம். ஏழ்ரை செய்தோம். காப்ராக்கூட்டினோம்.சபரி திடீரென்று சொன்னான் 
" ராஜா அந்த ஆன்டியப் பாருங்களேன்"
"டேய் இதெல்லாம் உன்னோட நிப்பாட்டிக்கோ, மரியாத கெட்ரும்"
"இல்ல ராஜா, நீங்க தேவத கவித எழுதுனீங்கலே அதுல ஒரு கவிதைல சொல்லுவீங்கள்ல "அடர் நீல நிறப் பாட்டியாலா"அது இது தான"
அவன் சொன்ன பெண்மனியைக் கவணித்தேன். கோபமாகச் சொன்னேன் " டேய் லூஸு, இது மயில் ப்ளூ, அதுவும் ஸாரி. இது கூடத் தெரியாத உனக்கெல்லாம் எத்தன கேர்ள் பிரண்ட்சு, வாராவாரம் டேட்டிங்கு. ம்ம்ம் இந்தியால பெண்கள நிலை உயரவே உயராதுரா"
"ஹலோ உங்களூக்கு எதும் பிகரு சிக்கலன்னு பொறாம"
அப்போது தான் கவணித்தேன் அந்தப் பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறேன். ஆனால் சமீபத்தில் அல்ல. சட்டென்று நினைவுக்கு வந்தது.

அப்போது நாங்கள் 9- படித்துக் கொண்டிருந்தோம். அரையாண்டுப் பரிட்சை லீவு. நானும், மாரியும் சாவடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அபோது ஓடோடி வந்தனர் பாலுவும், இருளான்டி (@) இருளனும். கேட்டோம் " என்னா பாலு, என்னா இருளு எதும் ஏழ்ரையா?"
இல்ல பங்களிகா. இங்க வாங்கடா.
எங்கடா.
டேய் பொக்குனு வாங்கடா சீக்கிரமா.

சென்றோம். மதுரையின் கீழச் சித்திரை வீதியை சென்னையின் சௌகார்பேட்டுக்கு ஒப்பிடலாம். வடநாட்டில் இருந்து பிழைக்க வந்து, வந்த புதிதில் எங்களுக்குக் கூளைக் கும்பிடு போட்டு, பின்னர் நாலு காசு சேரவும் அளப்பரை செய்து கொண்டிருக்கும் நார்த்திந்திய நன்னாரிகள் அங்கே அதிகம். அதை தான்டிச் சென்றோம். மதுரையின் பிரபல ஜவிளுக்கடைகளின் பின்புறச் சந்து. பெரும்பாலும் லோரு ஏற்ற, இறக்க மட்டும் திறக்கப்படும் பெரிய கதவுகள். அந்தச் சந்தின் கடைசியில் சென்று " கருப்பசாமி நாடர் ஜவுளிக்கடை"யின் குடவுன் சுரை ஏறிக் குதித்தால் எங்கள் பள்ளியின் பின்புறச் சுவரை அடயலாம். ஏறிக் குதித்தோம். அடைந்தோம்.
பாலு சொன்னான் " மாப்ளைகளா சத்தம் போடாம் வாங்க" போனோம். எங்கள் பள்ளியின் பழைய சத்துணவுக் கட்டிடம். ஓட்டுக் கூரை சிதிலமடைந்து கிடக்கும். அதனுள்ளே நிழலாடுவது தெரிந்தது. அருகே சென்று உற்றுக் கவணித்தோம். எற்கனவே உற்றுக் கவணீத்துக் கொண்டிருந்தனர் கந்தரகோலமும், உரெழவும். "வந்துட்டீங்களா" என்றான் கந்தரகோலம். "எலேய்க் கந்தரு, என்னடா இது". "சத்தம் போடாமப் பாருங்க". பார்த்தோம்.உள்ளெ எங்கள் வயதை ஒத்த ஒரு ஆணும், பெண்ணும். இல்லையில்லை சிறுவனும், சிறுமியும். அப்போது நாங்கள் 9- படித்துக் கொண்டிருந்தோம். எங்களுக்கோ உடல் நடுங்கியது. இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து முத்தமிட்டனர். பின்னர் மறுபடியும். பின்னர் மறுமறுபடியும். நாங்கள்? பார்த்தோம், வியர்த்தோம், துடித்தோம், தவித்தோம் மற்றும் இன்ன பிறா தோம் தோம். விறுவிறுவெண்று உள்ளே நுழைந்தோம். சத்தாமாய்க் கேட்டேன் " யார்ரா நீங்க". என்னாடா செய்ரீங்க எங்க பள்ளியோடத்துல" அவள் துடித்தாள். எப்படியும் தப்பிக்க முடியாது. வாசலில் "ஊரெழவு". மகாமுரடன். பாவ புண்ணியம் பார்க்காமல் அடிப்பான் என்பதும், மண்டையைத் திறப்பதில் ஸ்பெசலிஸ்ட் என்பதும் மதுரை மாநகராட்சி எல்லைக்குள் வாழும் எங்கள் வயதை ஒத்த அனைவருக்கும் தெரியும். அப்பேற்பட்ட கர்னகொடூரன்.

பின் அவன் கேட்டான். "யாருங்க நீங்கலாம்" 
" டேய் எங்க பள்ளிகொடத்துக்குள்ள வந்துட்டு எங்கள யாருனு கேக்குற". வடக்கு மாசி வீதிடா. கேள்விபட்ருப்பேல. நீ எந்த ஏரியா" மாரி துளைத்தான்.
"வடக்கு மாசி வீதிடா" என்ற வார்த்தை அவன் முகத்தில் பயத்தை படரச் செய்தது. சொன்னான். " இங்க தாங்க. கில ஸித்ர வீதி" 
"டேய் அது கீழச் சித்திர வீதிடா. இங்க என்னடா செய்றீங்க" கர்ஜித்தான் இருளன்.

இல்லங்க இது தாங்க எங்க பழக்கம்.

எதுடா பள்ளிக்கொடத்துல ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடுறதா? சீறினான் பாலு.

அப்புறம் அவன் விளக்கினான். அதாவது அவர்கள் இருவரும் காதலர்களாம். அவர்கள் சம்பிரதாயப்படி இது சகஜமாம்.மற்றும் நிறையச் சொன்னான்.வேணும்னா எங்க வீட்ல வந்து கேட்டுக்கோங்க என்றான். எங்களுக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 
சரி, சரி ரெண்டு பேரும் கெளம்பு இனிமே இந்தப் பக்கமே வரக்கூடாது. என்று சொல்லிப் பத்தி விட்டோம்.

வெளியில் நின்ற ஊரலு (ஊரெழவு) கேட்டான். டேய் என்னடா அவய்ங்கள விட்டுட்டீங்க. விளக்கினோம். அவர்கள் பழக்கத்தை. ஊரலு சொன்னான் நல்ல்ல்ல்ல பழக்கம்டா இந்த ஸேட்டய்ங்களுக்கு. இருளன் பதறினான் "டேய் இல்லடா இது கெட்ட பழக்கம்டா" அனைவரும் சிரித்தோம்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் ஆட்டொரலைக் கரைத்துவிட்டு, அம்மிக்கல்லைத் தேய்த்துவிட்டு, வெயில் வீணாகப் போகிறதே என்ற சமூக அக்கறையில் அலைந்து கொண்டிருந்தோம். மாரி வியர்க்க, விறுவிறுக்க வந்து சொன்னான். டேய் கண்டு பிடிச்சுட்டேன்டா. என்னாடா என்ற போது தெரிந்தது.
அந்தப் பையன் பேரு *********. அவன் யாருன்னா "நமக்சந்த் கட்டாரிலால் என்று ஆரம்பித்து இடையில் சிலபல சந்துகளும் ஏகப்பட்ட லால்களும் வந்து மீர்மல் ஜெயின்" என்று முடியும் ஒரு ஸேட்டின் மகனாம். அந்தப் புள்ள? விசாரிக்கச் சென்ற "தலப்பெரட்டும்", "கந்தரகோலமும்" வந்து சொன்ன செய்தி. "அந்தப் புள்ள பேரு ***. எழுகடல் தெருவுல ஜிகினாப் பேப்பர் கடவச்சிருக்க ஸேட்டு மகளாம், வீடு அன்னக்குழி மண்டபத்தெருவுல, ரெண்டு பேரும் சொந்தக்காராய்ங்க தானாம். அவன் ஒன்பதாப்பு, அந்தப் புள்ள எட்டாப்பு".
"சொந்தக்காரய்ங்க தானா. அப்ப அவய்ங்க சொன்னது நெசமாத்தானப்பா இருக்கும். விடுங்க" என்று மதுரை மாநாகரின் கலாச்சாரக் காவலர்களான நாங்கள் முடிவெடுதோம்.

ஒருவாரம் சென்றிருக்கும். ஒருநாள் ஏரியா சுள்ளாய்ங்களிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தபோது "தலப்பெரட்டு" வந்து அவன் ( ஸேட்டு மகன்) எங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதாய்ச் சொன்னான். எதற்கு என்று தெரியாமல் குழம்பினோம்.சற்று நேரத்தில் அவன் வந்தான். ஹீரோ ரேஞ்சர் ஸ்ரெயிட் ஹாண்டில்பார் வைத்த சைக்கிளில். (ம்ம்ம்ம்ம் பணக்காரன்).

அதாவது அவர்களிருவருக்கும் நடுவில் புகுந்து ஆட்டையக் குளைக்க ஒரு அக்ரஹாரத்து ஜந்து முயற்சிப்பதாகவும், நாங்கள் தான் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் சொன்னான். நாங்கள் முடிவெடுத்தோம். "உண்மை காதல்"க்கு உதவுவதாய். அந்த ஜந்து எதுவெண்ரு அடையாளம் கண்டோம். அன்று முற்பகலே "வருவன உரைக்கும் மதியூகி" கூழுப்பான தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தி, பின்னர் மதியம் "கொரவள கூத்தாட கொலச்சு அடஞ்சுட்டு", "பொம்பளப்புள்ள,ஆம்பளப்பயனு பாக்காத அதம்பனும், கெழவன், கெழவியைக்கூட மண்ணிக்காத கல்நெஞ்சனுமான, ஈடு இனையற்ற கர்னகொடூரத் தளபதி" மாவீரன் ஊரெழவு தலைமையில் வடக்குமாசிவீதிப் படைகள் அணிவகுத்தன இலட்சுமி நாரயணபுர அக்ரஹாரம் நோக்கி.


வடக்குமாசிவீதிப்படைகள் போருக்கு வருவது தெரியாமல் பருப்பு உசிலி, தயிர்ச்சாதம், வத்தல்கொழம்பு, மற்றும் பலதைத் தின்றுவிட்டு குப்புறப்படுத்து உறங்கிக்கொண்டிருந்தது அக்கிரகாரம். தெருவின் இரண்டு முனைகளிலும் தலா  ஒருவன்  நின்று கொள்வது. ஒருவன் சென்று அவனைப் பேச்சுக் கொடுத்து வீட்டை விட்டு வெளியே அழைத்து வருவது. மற்றவர்கள் அனைவரும் "கொரில்ல" முறையில் அக்கம்பக்கத்து வீட்டுத் திண்ணைகளில் பதுங்கி இருப்பது. தாக்குதலுக்குத் தலமையேற்றிருக்கும் தளபதி "ஊரெழவனார்" வலக்கையை இருமுறை உயர்த்தி ( சைகை) உடன் அனைவரும் ஏககாலத்தில் கூடி அவன் மேல் பாய்ந்து நாசகாரித் தாக்குதல் நடத்த வேண்டியது. "வில்லங்கம்" தலைமயில் ஒரு படைப்பிரிவு வேறு யாராவது அவனுக்கு ஆதரவாகவோ, காப்பாற்றவோ வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்தத் தயாராய் இருப்பது. இவ்வாறு வியூகம் அமைத்துக் கொடுத்தார் தளபதி. அவனை வெளியில் அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேரே சென்று அவன் வீட்டுக் கதவைத் தட்டினேன். அவன் தான் திறந்தான். "சாமீ இங்க ஷடகோபய்யங்கார் வீடு" 
"யெஸ் இது தான். என்ன வேணும்?"
"சாமீ நாங்க மக்காய்ந்தோப்புல இருந்து வாரோம். சாமியப் பாககனும்"
"மக்காய்ந்தோப்பா? அவள்லாம் வியாசர்புர அக்ரஹாரத்துக்குனா போவா, அது இங்கேர்ந்து மேற்க போகனும். படித்துறை இருக்கோன்னோ, அதுக்கு மேற்குப்பக்கமா, பேச்சியம்மன் கோவில் இருக்கும். அத ஒட்டி போற ரோட்ல போங்கோ. அங்க ஒரு அக்ரஹாரம் இருக்கு" பூணூலைச் சரி செய்தபடியே சொன்னது அந்த ஜந்து. உள்ளுக்குள் ஆயிரம் கோபம் இருந்தபோதும், அக்ரஹாரத்துவாசிகளை முன்னிலையில் "சாமீ" என்றே அழைக்கப் பழக்கித் தரப்பட்டிருந்தோம்.

"இல்லைங்க சாமீ, அதுதேன் இந்தத் தடவ மொளப்பாரில மனஸ்தாபமாகிப் போச்சுல அதுதேன். நாளைக்கு நம்ம வீட்டுல தாத்தாவுக்கு தெவசம். தாணங் குடுக்கனும். ஐயருக ஒரு பதினோரு பேரு வேணும் சாமீ"
"சரி அப்பா தூங்கிண்டு இருக்கா. இப்பத்தான் படுத்தா. நீங்க போயிட்டு சாயந்தரமா வாங்கோ" பதறிவிட்டேன். " சாமி பெரியவக எல்லாம் வந்துருக்காக. அந்தா அங்க அனுமார் கோவில் மண்டபத்துல காத்துக்கிட்டு இருக்காக" என்றேன். ஒர்கவுட் ஆனது.
"அட்டா பெரியவாள காக்க வைக்கப்படாதே. அது மஹாப்பாவம், இருங்கோ. நான் சட்டைய மாட்டிண்டு வர்றேன். செத்த நாழி இருங்கோ" உள்ளே சென்றது.
நான் பதுங்கியிருந்த எம் படைவீரர்களுக்கு "வெற்றி" என்று குறிப்பாலுணர்த்திணேன்.
வந்தான். " ரொம்ப நேரமாக் காத்திருக்காளா? " 
"ஆமாங்க சாமி. வீடு தெரியாமத் தெணறிட்டோம்." மனதுக்குள் கறுவியபடியே அழைத்து வந்தேன். 

தாக்குதலுக்காக குறித்து வைக்கைப்பட்டிருந்த இடம் வந்ததும் சட்டென்று நின்றேன். அவன் கேட்டான் " என்ன நின்னுட்டேள். வாங்கோ" நானோ தளபதியின் உத்தரவுக்காய் காத்திருந்தேன். சைகை செய்தான் உத்தமன் ஊரெழவு. 
சற்றே பின்னேறி வலக்காலை நன்றாக உயர்த்தி "நங்" என்று எத்தினேன் அவன் நடு நெஞ்சில். எதிர்பாராத தாக்குதலால் நிலை குலைந்தான். சுருண்டு விழுந்தான். கத்தினேன் "ஏன்டாப் ------ நாயே. அவய்ங்களேப் பாவம் வட நாட்ல இருந்து பொழைக்க வந்து, மீனாட்சி புண்ணியத்துல பொழைக்குறாய்ங்க, நீ என்னாடான்னா எடவாரத்துல ஒரு கொடவாரமுன்னு கோனக்கலப்ப சாத்துறியா?" பளாரென்று அறைந்தேன். படைகள் திரண்டன. துவம்சம் செய்தோம். அதற்குள் சத்தம் கேட்டு ஓடோடி வந்தன ஏழெட்டு அக்ரஹாரவாசிகள். யுத்தம் துவங்கியது.

கொடல்கொழம்பு, கோழிச்சாறு, தலக்கறி, நெஞ்செலும்பு, சொவரொட்டி, தேளி மீனு ஒரு புறம். மறுபுறமோ பருப்பு, நெய், அவரைக்கா சாம்பார், புடலங்காய்க் கூட்டு, மிளகு ரசம், தயிர்சாதம் நார்த்தங்கா ஊறுகாய்.ம்ம்ம் வழக்கம் போல அசைவமே வென்றது. அநியாயம் தோற்றது. வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு "உண்மையான காதலுக்காக " போர்புரிகிறோம் என்கிற நினைப்பு அதிக உத்வேகத்தைக் கொடுத்தது. 

முன்னால், பின்னால் என்று இருபுறமும் டயர்கள் கொண்டதும், பெல்லைத் தவிர மற்ற எல்லா ஸ்பேர்பார்ட்ஸும் சவுண்டு கொடுக்கும் பெருமைக்கு உரியதுமான தனது ஆஸ்தான வாகனமான அந்த "ஹெர்குலிஸ்" சைக்கிளை விட்டு அவசரமாய் இறங்கி, ஸ்டாண்டு போடக் கூட நேரமின்றி ஒரு வீட்டின் சுவரின் சாய்த்து வைத்துவிட்டு, தளபதியே(ஊரெழவு ) நேரடியாகக் களமிறங்கி, அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கலை எடுத்து ஒருவன் மண்டையைத் திறந்து மீனாட்சிக்கு மாவிளக்கெடுத்தார். தெறித்து ஓடியது காக்காய் கூட்டம். நின்று விளையாடின "கடிச்சாத் திரும்பாத கருநாகக் குட்டிகள்". 

மறுபடியும் அவன் தனியாய். விசயத்தை விவரித்துக்கொண்டே வெளுத்தோம். அவன் துடியாய்த் துடித்தான். நாங்கள் மிகவும் ரசித்தோம். அவன் வாயில் இருந்து ஒழுகிய எச்சிலையும், ரத்தத்தையும் துடைத்தவண்ணம் வலியால் துடித்த வண்ணம் சொன்னான் "அவா ரெண்டு பேரும் ஏதேதோ பொய் சொல்லிண்டு, ஏடாகூடாமத் தப்புப்பண்ணின்டிருக்கா. இவள்லாம் என்ன எதுனே தெரியாம அவாளுக்கு வெலக்குப் புடிக்குறா. டேய் விடுபயலுகளா அப்டி என்னடா வடக்குமாசி வீதில பஞ்சம் வந்துடுத்து, ஒயின்ஷாப்பு, வட்டிக் காசுனு நல்லாத்தானே இருக்கேள். என்ன கேடுன்னு இப்டிக் கூலிக்கு வெளக்குப்புடிக்கிற அளவுக்கு வந்த்துட்டேள்" 

இந்த வார்த்தைகள் எங்களை மேலும் வெறியேற்ற, கொலைவெறியுடன் தளபதி அவனை நோக்கி முன்னேற மாரி தடுத்தாட்கொண்டான். "விடு ஊரலு, நீ போ நாங்க பாத்துகிறோம். அதுவேற செத்துக்கித்துப் போயிர போறயான். அப்புறம் பிரம்மஹத்திம்பாய்ங்க" நான் இடைமறித்தேன் "போயிட்டுப் போகுது மாரி. பிரம்மஹத்தின்னாப் பயந்துருவோமா. இருக்கவே இருக்கு இராமேஸ்வரம் போயித் தீத்தமாடிட்டுப் போறோம்" என்றவாறே தரையில் அரைஉயிராய்க் கிடந்த வனை மறுபடியும் நங்கென்று எத்தினேன். ஆம் எல்லாமே ஒரு உண்மைக்காதலுக்காக. அவன் உரக்கச் சொன்னான் " டேய்ப் பாவி சண்டாளா. தாணங்குடுக்க ப்ராமனா வேனும்னு சொல்லிக் கூட்டிடு வந்துட்டு இப்டி நடுரோட்ல போட்டு அடிக்கிறயேடா நம்பிக்க துரோகி. நீ எல்லாம் மனுஷனே இல்லடா. நீயெல்லாம் பொறந்ததே தப்புடா. மனுஷ்ய குலத்துக்கே அபவாதம்டா. லோகத்துகே துஷ்டிடா நீ. பத்துவீடு தள்ளீ எங்காத்துல எல்லாருந்தூங்கிண்டு இருக்கா. இங்க நா அநாதமாதிரி தெருவுல அடிவாங்கிண்டிருக்கேனே. பகவானே நாராயனா என்னால முடியாதுடா. நீயே பாத்துக்கோ இந்த அட்டூழியத்த"
அருகே சென்றேன் " டேய் உங்க பெருமாலு என்னா மொட்டமடிலயாடா இருக்காரு. மேல பாத்துக் கத்துற. தெக்க திரும்புடா எங்க மீனாட்சியும் சொக்கரும் சிரிச்ச வானைக்கு வருவாக" என்றான் கந்தரகோலம். நான் சொன்னேன் " டேய் மரியாதையாப் போயி அந்தப் பயகிட்ட மண்ணிப்புக் கேட்ரு இல்ல வக்காளி கருமாதிக்கு எலும்பிருக்காது" அவன் சீறினான் " டேய் மாஹாப்பாவி, ராட்சஸபயலே, நம்பிக்கத்துரோகி, அயோக்கியப் பயலே. உன்ன நமபி வந்தேனேடா இப்டி நடுதெருவுல போட்டு அடிகிறயேடா. டேய் நா எதுக்குடா மண்ணிப்புக் கேக்கனும். நீ தான்டா கேக்கனும் பகவாங்கிட்ட. நம்பிக்க துரோகம் பஞ்சமாபாதகத்துல ஒன்னுடா. ஆனா மண்ணிப்புக் கேக்கக் கூட ஒனக்கெல்லாம் தகுதி இல்லடா களவானிப் பயலே. என்கிட்ட மண்ணிப்புக் கேக்க உனக்குத் தோனும்டா ஒருநாள். ஆனா உன்னாடி கேக்க முடியாதுடா. மண்ணிப்புக் கேக்கனும்னு ஏங்குவடா. தூக்கம் வராமக் கெடந்து தவிப்படா நாசாகாரப் பயலே". 

பொறுமை இழந்தோம் நாங்கள். துவம்சம் தொடர்ந்தது. 

முடிவாய் அவனை எச்சரித்தோம். அவன் மரியாதயாய் "ஸேட்டு மகனிடம்" மண்ணிப்புக் கேட்க வேண்டும் என்றும், அந்த உண்மைக் காதலுக்கு இனி குறுக்கே வரக் கூடாதென்றும். மீறினால்?.. செந்தமிழிலே சொல்வதானால், அவன் அவனுடய தாயாரிடத்திலே பருகிய தாய்ப்பாலைக் கக்கும் வரை அடிப்போம் என்றும், அவன் தாய் பத்தினி அல்ல என்றும் அர்த்தம் வரும் வகையில் "மதுரை தமிழில்" எச்சரித்து விட்டு வந்தோம்.

அப்புறம் +1 சேர்ந்து, இரண்டாவது நாள் அந்த ஜந்து எங்கள் பள்ளிக்கு வந்தது. அதுவும் நாங்கள் படித்த ஃபர்ஸ்ட் க்ரூப், பயோ மேத்ஸே சேர்ந்தது. நாங்களோ எங்களுக்குள் பேசிக் கொண்டோம். அப்புறம் தான் விஷயம் தெரிந்தது. அவனுக்கு உடல் நிலைக் கோளாறாம். இரண்டு சிறு நீரகங்களும் பழுதடைந்து விட்டனவாம். ஆனாலும் 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 430+ மார்க் வாங்கிவிட்டான். ஆனால் அவன் படித்த பள்ளியில் இவனுக்கு வியாதி இருப்பது தெரிந்து சேர்க்க வில்லை அதனால் இங்கே வந்துவிட்டான். நாங்க மனம் மகிழ்ந்தோம். "வரனும்டா இவனுக்கெல்லாம் இன்னும் பெரிய பெரியா சீக்கா வரனும்டா, அப்பத்தான்டா நாட்ல தப்புப் பண்றவய்ங்க பயப்டுவாய்ங்க" என்றான் ஏழ்ர. அனைவரும் ஆமோதித்தோம்.

ஒருவாரம் சென்றது. ஒருநாள் மதிய உணவு முடித்துவிட்டு வகுப்பு தொடங்கும் முன் வகுப்பறையில் அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். அது வந்தது எங்களிடம். ஆம் நாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி இறுதி ஆன்டு வரை கடைசி பெஞ்சின் காவலர்கள். அவன் கேட்டான். என்ன ராஜா எப்டி இருக்கேள். என்னத் தெரியர்தா. நான் மாரியிடம் திரும்பிச் சொன்னேன்." இதுக்குதான்டா மாரி அப்பவே அடையாளம் இருக்க மாதிரி எதாவது செய்வோம்டானு, கேட்டியா. இன்னைக்குப் பாரு கருடா சவுக்கியாமானு கேக்குது. இது சத்துக்கு."

அவன் மறுபடி சொன்னான். " இல்லங்க, நான் அதெல்லாம் மறந்துட்டேன். நீங்க ஏன் இன்னும் அதையே ஞாபகம் வச்சுட்டு. இது உங்க ஸ்கூல். நா வேற புதுசா வந்திருக்கேன். எங்க ராகிங் பண்ணுவாளோன்னு பயந்துட்டு இருந்தேன். இப்ப தைர்யம் வந்துடுத்து. அதான் நீங்க இருக்கேளே. நேக்கென்ன."

எங்கள் தளபதி டென்சனாகிவிட்டார். டேய் கதவச் சாத்துடா என்று கர்ஜித்தான். அனைவரும் சேர்ந்து கெஞ்சிக், கதறி, கூத்தாடி தளபதியை சாந்தப்படுத்தினோம். அவனிடம் சொன்னோம். இன்னொரு தடவ எங்க பக்கம் வந்து பேசனும்னு நினைச்சா, எத்துர எத்துல அவன் ஈரக்குளை வாய் வழியே தவ்வி வெளியே வந்துவிடுமென்று. அவன் சென்று விட்டான். அடுத்த நாள் இருந்து அவன் பள்ளிகூடம் பக்கமே வரவில்லை.


இப்போது அதே ****** (ஸேட்டு மகன்) அவன் மனைவியுடனும், அந்தப் பெண் அவள் கணவனுடனும், இவர்கள் பயதையொத்தா இன்னும் மூன்று ஜோடிகளும். அனைவரிடமும் குழந்தைகள்.

அந்த ஹோட்டலின் ஏர்கண்டிஷனையும் மீறி எனக்கு வியர்த்தது. மனம் துடியாய்த் துடித்தது. ஆம் நாங்கள் அனைவருமே ஏமாற்றப்பட்டிருக்கிறோம். அதோடு இப்ப அவன் மனைவியும், அவள் கணவனும். செயலபடமுடியாமல் தவித்தேன். நேரே சென்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி பளரென்று அறைந்து கேட்க வெண்டும் " ஏன்டா மேட்டருக்கு ஒருத்தி, மீட்டருக்கு இன்னொருத்தியா" என்று. இப்போது சொல்வான் " இல்லங்க இது தாங்க எங்க பழக்கம் என்று"


இது எதுவும் தெரியாமல் இங்கே ண்பர்கள் கும்மாளம்.
ரகு வழக்கம்போல் " ண்ணா, நறுக்குனு கடிச்சு, சக்கு சக்குனு மென்னு திங்குற மாதிரி கெட்டிய தண்ணி கிடைக்குமானா" 
சவுந்தரோ இன்னும் ஒரு படி மேலே போய் " அண்ணே நல்லா நெய் நெறையா ஊத்தி, முறுகலா ஒரு நெய் ரோஸ்ட் போடுங்க. அத அப்டியே எடுதுட்டுப் போய் யாரு கேகுறாங்களோ அவங்களுக்குக் குடுங்க. அதே கல்லுல ஒரு சாதா தோச போட்டு எனக்க்குக் கொண்டு வாங்க" என்று ஆளாளுக்கு அந்த ஹோட்டல் சப்ளையர்கள் வாயில் விழுந்துகொண்டிருந்தார்கள். என் மனமோ சொல்லவொண்ணா வேதனையில்.

சவுந்தர் அடித்த " ஏ தம்பி சிகப்புச் சட்ட " காமெடியில் கூட மனம் லயிக்கவில்லை. ஆனாலும் சம்பிரதாயாமாய்ச் சிரித்து வைத்தேன் சந்தேககம் வரக் கூடாதென்று. 

டெஸர்ட், ஃபுரூட் ஸாலட் என்று ஒருவழியாய் பில் வந்தது. கொடுத்தேன். டிப்ஸ் வைத்தேன். கிளம்பினோம். நடந்து வரும் போதே யோசித்தேன். இந்தத் தறுதலைக இப்டித் திரியுதுக. பாவம் அந்த ஐயர் வீட்டுப் பையன். சுரீரென்றது மனது.
இப்போதைக்கு இந்தியாவில் இருக்கும் இரண்டே தறுதலைகல் நானும், மாரியும் தான். மாரியை அழைத்தேன்.
"என்னய்யா பிறந்தநாள்க்காரரே என்ன செய்றீங்க"
"நல்லாருக்கேன் மாரி" அப்புறம் சம்பிரதாயப் பேச்சு வார்த்தைகள், முடிந்து விசாரித்தேன். 

ஏன்டா மாரி ஒனக்கு ஞாபகம் இருக்கா அந்த ஸேட்டு வீட்டுப் பையனும், புள்ளையும்...

ம்ம்ம்ம் அதுவா, அதுக ரெண்டும் பெரிய ரூட்டுக மாப்ள. நம்மதான்டா என்னா ஏதுனு தெரியாமப் பாவம் ஐயரு வீட்டுப் பயல மந்திரிச்சுவிடுட்டோம்.

யாரடா என்றேன், தெரியாதது போல.

டேய் உண்மையில்யே தெரியாதா? அவன் எங்களக் கூடப் பொதுவாத்தான்டா பேசுனான். உன்னத் தான் " நீயெல்லாம் பொறந்ததே தப்புடா"ன்னு சொன்னான்.

மாரி இப்ப அவன் எங்கடா இருக்கான்.

மாரி சிரித்தான் " எங்க இருப்பான்"
சொல்லுடா மாரி எங்கடா இருக்கான். அவனப் பாக்கனும்டா. அவங்கிட்ட மண்ணிப்புக் கேக்கனும் போல இருக்குடா மாரி.

எதுக்குடா ராஜா. திடீருனு..

இல்ல மாரி அவனப் பாக்கனும். அவங்கிட்ட, அவன் கண்ணப் பாத்து மண்ணிப்புக் கேகனும்டா.

டேய் ஏன்டா. உனக்குத் தெரியாதா? அவன் நம்ம +2 படிக்கிறப்பவே உடம்பு சுகமில்லாம இருந்து, போய்ட்டான்டா, மீனாட்சியே மஞ்சத்தண்ணி ஊத்திட்டாடா.

ஐயய்யோஒ பெருங்குரலில் கதறினேன். போனில் எதிர்பக்கம் மாரியும், சுற்றியிருந்த நண்பர்களும் பதறினார்கள்.
ஒன்னுமில்ல சும்மா.. கத்துனா என்னா பண்றீங்கனு பாத்தேன்.
சமாளித்தேன். சரி மாரி நீ துங்கு. போனைக் கட் செய்தேன்.

அவன் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தன...


அவா ரெண்டு பேரும் ஏதேதோ பொய் சொல்லிண்டு, ஏடாகூடாமத் தப்புப்பண்ணின்டிருக்கா. இவள்லாம் என்ன எதுனே தெரியாம அவாளுக்கு வெலக்குப் புடிக்குறா. 

டேய்ப் பாவி சண்டாளா. தாணங்குடுக்க ப்ராமனா வேனும்னு சொல்லிக் கூட்டிட்டு வந்துட்டு இப்டி நடுரோட்ல போட்டு அடிக்கிறயேடா நம்பிக்க துரோகி. நீ எல்லாம் மனுஷனே இல்லடா. நீயெல்லாம் பொறந்ததே தப்புடா. மனுஷ்ய குலத்துக்கே அபவாதம்டா. லோகத்துகே துஷ்டிடா நீ. பத்துவீடு தள்ளீ எங்காத்துல எல்லாருந்தூங்கிண்டு இருக்கா. இங்க நா அநாதமாதிரி தெருவுல அடிவாங்கிண்டிருக்கேனே. பகவானே நாராயனா என்னால முடியாதுடா. நீயே பாத்துக்கோ இந்த அட்டூழியத்த
டேய் மாஹாப்பாவி, ராட்சஸபயலே, நம்பிக்கத்துரோகி, அயோக்கியப் பயலே. உன்ன நம்ம்ம்பி வந்தேனேடா இப்டி நடுதெருவுல போட்டு அடிகிறயேடா. டேய் நா எதுக்குடா மண்ணிப்புக் கேக்கனும். நீ தான்டா கேக்கனும் பகவாங்கிட்ட. நம்பிக்க துரோகம் பஞ்சமாபாதகத்துல ஒன்னுடா. ஆனா மண்ணிப்புக் கேக்கக் கூட ஒனக்கெல்லாம் தகுதி இல்லடா களவானிப் பயலே. என்கிட்ட மண்ணிப்புக் கேக்க உனக்குத் தோனும்டா ஒருநாள். ஆனா உன்னாடி கேக்க முடியாதுடா. மண்ணிப்புக் கேக்கனும்னு ஏங்குவடா. தூக்கம் வராமாக் கெடந்து தவிப்படா நாசாகாரப் பயலே


வார்த்தைகள் ஒவ்வொன்றும் சயனைட் குப்பிகளாய்க் கொன்றன. மேன்சனுக்கு வந்தோம். நிறிது நேரம் அரட்டையடித்துவிட்டுப் பிரியாவிடை பெற்றது நட்பு.

ரூமில் நான் தனியே. யோசித்தேன். அவன் புத்திசாலி. தீர்க்கதரிசி. என்னைப் பார்த்துக் கேள்வி கேட்டிருக்கிறான். நம்பி வந்தேனே, இப்டித் துரோகம் பண்ணிவிட்டாயே என்று. என்னிடம் பதிலில்லை. அப்போது அடித்தேன். இப்போது நினைத்துப் பார்த்து அழுகிறேன்.

ஆம் நான் பிறந்ததே தவறு தான் போல. எனக்கு மண்ணிப்புக் கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது. அனால் யாரிடம் கேட்க. மனது தவித்தது. தூக்கம் வரவில்லை.

ரேடியோ கேட்கலாம் என்று F M ஆன் செய்தேன் பாடல் ஓடியது " ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ"


அறிவிப்பு:
1)வேறென்ன. இந்தக் கதையில் வரும் சம்பவங்கள், நிகழ்வுகள், பெயர்கள், பாத்திரங்கள், பானைகள், குண்டாஞ்சட்டிகள், கிண்ணிகள், டம்ளர்கள், ஸ்பூன்கள், மற்றும் நானாவித தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாம் முழுக்க முழுக்கக் கற்பனையே.