Sunday 27 February 2011

ரயிலில் ரசிகன் காரில் கணவன்

வருடக் கடைசியில் இருப்பில் இருந்த
இருநாள் விடுப்பை ரசிக்க நினைத்தான்.

மனமின்றி எழுந்தவன்
அக்கரையாய்க் கிளம்பி
மனைவி கொடுத்த லிஸ்டுடன்
மார்க்கெட் செல்ல
வழியில் கண்ட மின் தொடர்வண்டி
அவன் மனம் மாற்ற காரை நிறுத்தி
ரயிலடி சென்று சீட்டு வாங்கிக்
கிளம்பினான் சென்னையை ரசிக்க


அதிகாலைச் சென்னை
அப்படியோர் அழகு
எவ்வளவோ தெரியாது
அவ்வளவும் அழகு

எலும்பூரில் மின் தொடர் வண்டியேறி
தாம்பரம் செல்லும் வழியெல்லம் அழகு.
பலமுறை பார்த்த அதே காட்சிகள்
ஒருமுறை கூடத் தோன்றியதில்லை
இவ்வளவு கவித்துவம் கொண்ட அழகாய் .

பள்ளி செல்லும் முனைப்பில்
கள்ளமறு பேதைகள்
துள்ளி வந்து ஏறிடும்
புள்ளினப் பெதும்பைகள்
இமயம்கண்ட பாண்டியர் மகரம்
இமைக்குள் கொண்ட மங்கையர் கூட்டம்
கடந்து செல்லும் போதெல்லாம்
தடம்புரட்டும் மடந்தைகளும்
புரியாப் புதிராய் உலவும்
அரிவைக் கேள்விக் காவிரிகள்
தெரிவு செய்யும் வேலையை நமக்குத்
தெரிந்தே செய்யும் தெரிவைகள்
பூரித்த வதனத்தொடு
சிரித்திடும் பேரிளம்பெண்கள்

துவட்டாத் தலையோடு தாவியேறி
கதாநாயகர்களாகும் விடலைகள்
சுடிதார் அணிந்திருந்தால் பொம்மையைக் கூட
இருமுறை பார்க்கும் கல்லூரிச் செல்வங்கள்
இருகால் இடுக்கில் கைப்பை நுழைத்து
டை கட்டி நேரம் சேமிக்கும் உழைக்கும் கரங்கள்

மார்கழி மாத சீசன் சபாக்களில்
கிடைப்பதை விடவும் அரிய இசையை
சீர்காழி த்வனியில் அள்ளித் தெளித்து
சில்லைரை கேட்கும் சங்கீத சாகரங்கள்

கடுப்பாய் முறைக்கும் ஸ்லீவ்லெஸ் ஆன்ட்டி
வெறுப்பை உமிழும் ஸாப்ட்வேர் உயிரி
சிதறிச் சிரிக்கும் லிப்ஸ்டிக் உதட்டைக்
கடிப்பது போல் பார்க்கும் அரும்பு மீசை

இந்தக் கூட்டத்தைக் கொஞ்சமும் அறியா
தண்டவாளப் புல்மேயும் மகிஷங்கள்
எனரசித்தன வெல்லாம் ஒருவித அழகுடன்
புதிதாய்த் தோன்றும் சந்தோஷ நிமிஷங்கள்

சினுங்கிய செல்போனில் பொங்கிய மனைவி
அணலாய்க்கேட்டள் ஒரேயொரு கேள்வி
"ஏங்க மார்கெட் போய்ட்டு வர இவ்ளோ நேரமா? "
ரசிகன் செத்து முடித்த நொடியில்
உயிர்த்த கணவன் மெதுவாய்ச் சொன்னான்
"ஸாரிடா லேட்டாயிருச்சு. வந்துட்டே இருக்கேன். ஒன்னவர்ல வரேன்"

6 comments:

  1. அருமையான வரிகள் நண்பரே பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  2. நீங்க மதுரை எனில் என்னை தொடர்பு கொள்ளலாமே...நானும் மதுரை தான்.
    thaiprakash1@gmail.com

    ReplyDelete
  3. அருமை மதுரை ராஜா

    அத்திப்பூக்கள்....

    ReplyDelete
  4. அருமையான வரிகள் நண்பரே பாராட்டுக்கள்

    எம்முடைய முதல் பதிவிற்கு முதல் பின்னூட்டம் இட்ட தமிழ்தோட்டத்திற்கு நன்றிகள் கோடி

    ReplyDelete
  5. நீங்க மதுரை எனில் என்னை தொடர்பு கொள்ளலாமே...நானும் மதுரை தான்.
    thaiprakash1@gmail.com

    அவசியம் தொடர்பு கொள்கிறேன் பிரகாஷ் my # 98844 97357

    ReplyDelete
  6. அருமை மதுரை ராஜா

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பூஞ்சோலை

    ReplyDelete